July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பெரியார் நகர் இரா. மனோகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்த்தல், கட்சி அமைப்புகளை பலப்படுத்துதல், எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ளுதல் சம்பந்தமாக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் முன்னாள் எம்எல்ஏ கே. எஸ் தென்னரசு, முன்னாள் துணை மேயர் கே. சி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.