June 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விடுதி மாணவிகளுக்கு சிங்கப்பெண் அதிரடிப்படையினர் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்வு:-தேனி. ஜூன்.25-தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரம் பகுதியில் அமைந்துள்ள அரசு கள்ளர் மாணவிகள் விடுதியில், ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சார்பு ஆய்வாளர் பாண்டிச்செல்வி தலைமையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.விடுதியில் தங்கிப் பயிலும் மாணவிகளிடையே பேசிய சார்பு ஆய்வாளர் பாண்டிச்செல்வி, பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் சமூகத்தில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், தங்களின் சுய பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது என்றும் எடுத்துரைத்தார்.மேலும், “பெண்கள் நாட்டின் கண்கள்; பெண்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை. எதற்காகவும் தயங்கவோ, கோழைத்தனமாக இருக்கவோ கூடாது; எப்போதும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.தொடர்ந்து பேசிய அவர், “பெண் குழந்தைகள் ஆண்களிடம் பழகும்போது தங்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு பழக வேண்டும். அறிமுகம் உள்ளவர்களோ அல்லது இல்லாதவர்களோ, எந்தச் சூழ்நிலையிலும் தவறான முறையில் தொட்டுப் பேசினால் (Bad Touch), உடனடியாகக் காவல் துறையின் உதவி எண்களுக்கு அழைக்கலாம். உங்களுக்குத் துணையாக நாஙகள் எப்போதும் இருக்கிறோம்” என்று உறுதியளித்தார்.இந்த விழிப்புணர்வில் அனுசுயாதேவி, சுப்புலட்சுமி ரஞ்சித் ஆகியோர் உடனிருந்தனர்.பின்பு,விடுதி மாணவிகள் அனைவரும் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் வழங்கிய அறிவுரைகளைக் கேட்டு, தாங்களும் இனி வீராங்கனைகளைப் போல் தைரியமாக இருப்போம் என்று உறுதிகூறினர்.தொடர்ந்து மாணவிகள் சிங்கப்பெண் அதிரடிப்படை வாகனத்தை பார்வையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் . . . . . .