சர்மிளா என்ற பெண்ணை ஒருதலைபட்சமாக காதலித்த ஜோசப் என்ற நபர் அவரை(அந்த பெண்ணை ) நேற்றைய இரவு 9 மணி அளவில் ஒதுங்கி போலீஸ் ஸ்டேஷன் அருகில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தார். அவர் 80% உடல் எறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். நம்முடைய புதுச்சேரி எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது நம்முடைய சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்துக்கு அருகையே ஒரு பெண்ணுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுக்டிருக்கிறதுபுதுச்சேரியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. கஞ்சா கலாச்சாரத்தால் மதி இழந்து தவிக்கும் இளைஞர்கள் இவ்வாறு செய்கின்றனர். இவ்வாறு அந்த பெண்ணின் உயிர் பரிதாபத்துக்குள்ளாகி உயிரே பிரிந்து இந்த உலகத்தை விட்டு சென்றடைந்து விட்டது. இந்த NR& BJP
மேம்போக்கான அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது. பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத அரசு அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கேவலமான அரசை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுடைய சுயநலமே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. தேவையான காவலர் அதிகாரிகள் புதுச்சேரியில் இல்லை தேவையான பெண் காவல் அதிகாரிகள் புதுச்சேரியில் இல்லை தேவையான பெண் காவல் அதிகாரிகளோ அல்லது ஊர் காவல் படை அதிகாரிகளும் இரவு நேரத்தில் இல்லை. பெண்களுக்கும் முக்கியமாக கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் குடும்பப் பெண்களுக்கும் எதிரான ஒரு அரசாகவே இந்த பிஜேபி அரசு இருக்கிறது.இந்த NR & BJP அரசு ரேஸ்ட்டோபர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்காகவும் மேலும் பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காகவும் தங்களுடைய ஆட்சியின் நேரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்கள் கையூட்டு வாங்குவதிலேயே அவர்களுடைய கவனம் போய்க்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் முக்கியமாக பெண் பிள்ளைகள் பெண்கள் வேலைக்கு செல்பவர்கள் கல்லூரி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த என் ஆர் பி ஜே பி அரசு செயல்படவில்லை என்பதை நாங்கள் பலமுறை புதுச்சேரி மாநில மகளிர் காங்கிரஸ் சார்பாக பல போராட்டங்களின் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளோம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம். அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை நான் இந்த தருணத்தில் கேட்டு கொள்கின்றேன். மேலும் இந்த அடாவடி அட்டூழிய மனசாட்சியற்ற செயலை செய்த அந்த வாலிபருக்கு அதிகபட்ச தண்டனையை உடனடியாக கொடுக்க வேண்டும். என்றும் இந்த அரசை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
இப்படிக்கு :
A. R. நிஷா
மாநில தலைவி,
மகளிர் காங்கிரஸ்,
புதுச்சேரி,

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election