வீட்டுமனை இடம் அளவீடு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் வடகவுஞ்சி கிராமம், உட்கடை செம்பிரான்குளம் பழங்குடியினர் கிராமத்தில் வீட்டுமனை இல்லாத பழங்குடி மக்களுக்கு, கொடைக்கானல் கோட்டாடசியர் திருநாவுக்கரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாடசியர் திரு.ஜெயராஜன் அவர்களின் முயற்சியால் ஜீ. ஆர். டி. எஸ்டேட் நிர்வாகத்தினர் வீட்டுமனை இடம் தருவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர்.. அதே போன்று பெரியூர் கிராமத்தில் திரு. கோவிந்தராஜ் அவர்கள் ஆ/தி நலத்துறைக்கு 1 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுப்பதாக கூறியிருந்த இடம், கவுச்சிக்கொம்பு வளவு கிராமத்தில் மக்கள் குடியிருக்கும் இடம் திமுக ஒன்றிய செயலாளர் திரு. கருமலைபாண்டியன் & சகோதர்கள் இடம் இவற்றை நிலக்கோட்டை ஆதிதிராவிடர் (ம)பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாடசியர் அவர்களின் பெயரில் நிலத்தை பதிவு செய்து, அதன்பின் பழங்குடி மக்களுக்கு பட்டா வழங்கப்படும்,, இதற்காக நிலத்தை அளவீடு செய்யும் பணி இன்று தனி வட்டாட்சியர் திரு. ஜெயராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. உடன் நிலக்கோட்டை ஆ/தி நலம் தனி வருவாய் ஆய்வாளர் திரு. ஜான் பிரிட்டோ நில அளவையர்கள் திரு. தியாகராஜன், அழகுராஜா, தாண்டிக்குடி வருவாய் ஆய்வாளர் திரு. முத்தையா, கே.சி. பட்டி கிராம நிர்வாக அலுவலர் திரு. செல்வராஜ், பெரியூர் கிராம நிர்வாக அலுவலர் திரு. கோகுல், ஜீ. ஆர். டி. நிர்வாகம் சார்பாக ரைட்டர் திரு. ஜெகநாதன்,
ஆரோக்கிய அகம் திட்ட ஓருங்கிணைப்பாளர் திரு. சதாசிவம், தன்னார்வாளர்கள் திரு. நாகசெல்வம், திருமதி. இலட்சுமி, மகாலட்சுமி, பெரியூர் முன்னாள் ஊ. ம. தலைவர் மாலையம்மாள் முருகானந்தம் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்…

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election