கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பில்லூர் அணை பகுதியில் உள்ள நேசர் இயேசுவின் அன்பின் திருச்சபையில் கிறிஸ்துமஸ் தினவிழாவை முன்னிட்டு “கிறிஸ்துமஸ் நற்செய்தி சிறப்பு ஆராதனை” நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் கோராப்பதி பாஸ்டர் பாலன், ஆனைப்பள்ளி பாஸ்டர் சின்னச்சாமி, பில்லூர் அணை சகோ.லட்சுமணன், மேட்டுப்பாளையம் சகோ.செந்தில்குமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். வெள்ளியங்காடு சி.எஸ்.டி.எம் சீலோசபை பாஸ்டர் ஆர்.கே.பிரான்சிஸ் சிறப்பு செய்தியாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் குழந்தைகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து சந்திரன் மற்றும் செந்தில்குமார் ஏற்பாட்டில் பில்லூர் டேம் பகுதியைச் சார்ந்த கிராம மக்கள் 60 குடும்பங்களுக்கு பெட்ஷீட் மற்றும் 100 குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் கிறிஸ்துமஸ் பரிசுகளாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் அனைவருக்கும் மதிய உணவு அளித்தார்கள். நிகழ்வின் இறுதியில் பில்லூர் அணை சகோ.கே.சந்திரன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!