மொடக்குறிச்சி தாலுக்கா விளக்கேத்தி ஊராட்சி விளக்கேத்தியில் இருந்து சிவகிரி செல்லும் வழியில் அம்மன் நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சார்பாக கட்டித் தரப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குப்பை சேகரிக்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக எந்தப் துப்புறவு பணியாளரும் வருவதில்லை. அப்பகுதி வசிக்கும் மக்கள் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி குவித்து வருகின்றனர். இதனால் சுகாதார தேடும் கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறையும் ஊராட்சி நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!