ஸ்ரீசெல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனத்தலைவர்
வி.கே.பிரகாஷ் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம்
சேலம், நவ:2
சேலம் பச்சப்பட்டி
மெயின் ரோடு, துவக்கப்பள்ளி அருகில், 40- வது டிவிஷனில் ஸ்ரீசெல்வகணபதி மக்கள் சேவை அறக்கட்டளை அலுவலகத்தில் அதன் நிறுவனத் தலைவர் வி.கே.பிரகாஷ் பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி வழங்கி வருகிறார். அறக்கட்டளை நிறுவனத்தலைவர் வி.கே.பிரகாஷ் – க்கு நேற்று (சனிக்கிழமை) 42- ஆவது பிறந்த நாள் மற்றும் அவரது மகன் எஸ்.பி.ஷாம் -க்கு 13-ஆவது பிறந்த நாள் ஆகும். அதனையொட்டி நேற்று காலை அறக்கட்டளை தையல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெறும் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரகாஷ் மற்றும் ஷாம் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை செயலாளர் பி.சிந்துஜா, பிரகாஷ் குழந்தைகள் எஸ்.பி.சஞ்சனா, எஸ்.பி.சிபி, பொருளாளர் ஏ.விஜய், உறுப்பினர்கள் மற்றும் பச்சப்பட்டி பகுதி முதியோர், பெண்கள், சிறுவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட புகைப்பட நிருபர் : சுகுமார்.மு 8270400851

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!