April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

2026 சட்டமன்றத் தேர்தல் – புதுச்சேரிக்கு “மாநில அந்தஸ்து” பெற்றுத் தரும் நோக்கில் பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு

புதுச்சேரி, மார்ச் 27:

வருகின்ற 2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கையான “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து” பெற்றுத் தரும் நோக்கிலும், ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு, ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) தனது முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. ஏ.கே. ராஜசேகர் அவர்கள், பாஜக மாநிலத் தலைவர் திரு. ராமலிங்கம் அவர்களை நேரில் சந்தித்து, அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை வழங்கினார்.
இந்த நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான திரு. ஜி. தேவநாதன், திரு. டி. கந்தவேலு, திரு. எஸ். சத்தியநாராயணன், திரு. பி. பிரகாஷ், திரு. ஜே. சக்திவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு அணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
இதுகுறித்து தலைவர் திரு. ஏ.கே. ராஜசேகர் அவர்கள் தெரிவித்ததாவது:
புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கவும், நிலையான நிர்வாகம் அமையவும் “மாநில அந்தஸ்து” வழங்கப்பட வேண்டும் என்பது எங்களது கட்சியின் முதன்மை நோக்கமாகும். மத்திய அரசின் ஒத்துழைப்புடன் இக்கோரிக்கையை நிறைவேற்றவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரங்களை வலுப்படுத்தவும் இந்த ஆதரவு வழங்கப்படுகிறது.
மேலும், தற்போதைய சூழலில் வாக்குகள் சிதறுவது மாநிலத்தின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தனித்துப் போட்டியிடும் முடிவை கைவிட்டு, கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாக செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள கட்சித் தொண்டர்கள் முழு வீச்சில் களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்வார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த ஆதரவு அறிவிப்பை பாஜக மாநிலத் தலைவர் திரு. ராமலிங்கம் அவர்கள் வரவேற்று, ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இச்செய்தியினை தங்கள் செய்தி பிரிவின் மூலம் சிறப்பான செய்தியாக வெளியிடுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம் இப்படிக்கு ஏ.கே. ராஜசேகர் நிறுவன தலைவர் ஏ.கே.ஆர் தேசிய மக்கள் கட்சி புதுச்சேரி.

Facebook
YouTube
Instagram
WhatsApp