செஞ்சி.நவ.23
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சத்தியமங்கலம் வள்ளலார் தர்மசாலையில் நடைபெற்றது.
இதில் ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை நிறுவனர் ஞானமாணிக்கம் தலைமை தாங்கினார் விழுப்புரம் வடக்கு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கம் செயலாளர் முத்து கார்த்திகேயன் முன்னிலை வகித்தார் ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை பணியாளர் வெண்ணிலா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு உணவு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை மூலம் மாதந்தோறும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருவதாக ஆய்வாளர் சுரேஷ்பாபு கூறினார்.
மேலும் மாற்றுத்திறனாளி ஒருவர் பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தார் இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் சிபிஐ மாவட்ட செயலாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி, நவீன் எல்பிஜி கேஸ் சர்வீஸ் பிரான்சிஸ், , ஜான்டி குரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
ஞான ஒளி சமூக உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சத்தியமங்கலம் ராஜா நன்றி உரை வழங்கினார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!