February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

+2 மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி…!

வந்தவாசி, டிச 04:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவிகளுக்கு தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சி.செந்தில்குமார் (பொறுப்பு) தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி மா.கதிரொளி முன்னிலை வகித்தார். முதுகலை ஆசிரியர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, கல்வியாளர் பா.சீனிவாசன் பங்கேற்று, தேர்வு என்பது நீ எழுதப் போவதில்லை; தேர்வு தான் உன்னை எழுதப் போகிறது என்று வலியுறுத்தினார். மேலும் தேர்வு எழுதும் முறைகள் பற்றி விளக்கினார். கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ் பங்கேற்று, தேர்வு நேர மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை ஜெ.தமிழ்ச்செல்வி, வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் ஆசிரியர் இ.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp