பத்திரிகை செய்தி
புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுகவினர் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநில கழக நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் இன்று மாலை எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கழக கொள்கை பரப்புச் செயலாளரும், புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளருமான ஜெகத்ரட்சகன் எம்.பி தலைமை வகித்தார். சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், மாநில கழக அமைப்பாளருமான இரா. சிவா முன்னிலை வகித்தார். இதில் காரைக்கால் மாநில திமுக அமைப்பாளர் நாஜிம் எம்எல்ஏ, அவைத்தலைவர் எஸ்.பி. சிவகுமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்எல்ஏ, பொருளாளர் செந்தில்குமார் எம்எல்ஏ, இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் எம்எல்ஏ, நாகதியாகராஜன் எம்எல்ஏ, மாநில துணை அமைப்பாளர்கள் தைரியநாதன், ஏ.கே. குமார், காலப்பட்டு தொகுதி செந்தில் என்கிற ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் புதுச்சேரியில் திமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை விட இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
முன்னதாக இன்று காலை லப்போர்த் வீதியில் உள்ள மாநில கழக தலைமை அலுவலகத்தில், மாநில கழக அமைப்பாளர் இரா. சிவா தலைமையில், திமுக எம்எல்ஏ-க்கள் மற்றும் மாநில கழக நிர்வாகிகள் பங்கேற்ற தேர்தல் தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..