வந்தவாசி, மார்ச் 20:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் உலக நீர் தின சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் தலைமை தாங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கலைச்சுடர்மணி பெ.பார்த்திபன் வரவேற்றார். சுவாமி விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் டாக்டர் ம.சுரேஷ்பாபு, பட்டதாரி ஆசிரியர் ம.ரகுபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அ.லோகநாதன் பங்கேற்று, ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மேலும் உலகின் அனைத்து தேவைகளுக்கும் நீர் அவசியம் என்பதைப் பற்றியும், நீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது என்பதை பற்றியும் வலியுறுத்தினார். மேலும் உலக நீர் தின ஓவியப் போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலக மேலாளர் ஜெயக்கண்ணு வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் கல்வி மைய ஆசிரியர் மகாவீர் நன்றி கூறினார்.


More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election