விமுப்புரம் நகரத்தில் இயங்கிவரும் அன்னை தெரேசா பேரா மெடிக்கல் செவிலியர் கல்லூரியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளையின் அறிவுறுத்தலின் படி, போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நிர்வாக இயக்குனர் திரு. திருமால் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் தன்னார் வளரும். மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும்
விழுப்புரம் கல்வி மாவட்டக் கன்வீனர். முனைவர். ம.பாபு செல்வதுரை அவர்கள் கலந்துக் கொண்டு
போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தனி ஒழுக்கத்துடன் வாழ்வேன் என்ற உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து
மற்றவர்களுக்கு
போதை பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இது சார்ந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பள்ளி, கல்லூரிகள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் கல்லூரி மாணவர்களின் தன்னார்வமாக செயல்பட வேண்டும். அத்துடன் தற்கொலையினை தடுத்திடும் வண்ணம்
தன்னம்பிக்கை, மன உறுதி, சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்து கொள்வதோடு, கஷ்டத்திலும், மன உலைச்சலிலும் இருப்போருக்கு ஆறுதல் படுத்தும் ஆலோசகராகவும்,
கல்லூரி மாணவர்கள் செயல்பட வேண்டும் என கருத்துரையாற்றினார்.
இறுதியில் போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பினை வலிவுறுத்தி சுமார் 100 செவிலியர் பயிற்சி மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
விழுப்புரத்தில், போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!