April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வில்லியனூர் தொகுதியில்ரூ. 93.55 லட்சம் செலவில் வளர்ச்சிப் பணிகள்எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார் !

பத்திரிகை செய்தி

வில்லியனூர் சட்டமன்ற தொகுதி ஒதியம்பட்டு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பழநியப்பா நகர் மற்றும் மெடிமிக்ஸ் ரோட்டிற்கு பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு மூலம் ரூ. 40.80 லட்சம் செலவில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணி, வி. மணவெளி கிராமத்திற்கு உட்பட்ட விஐபி நகரில் ரூ. 48.76 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி மற்றும் ஒதியம்பட்டு ராமலிங்கனார் தெருவிற்கு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் ரூ. 3.99 லட்சம் செலவில் குடிநீர் குழாய் புதைக்கும் பணி என மொத்தம் ரூ. 93.55 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சாலை மற்றும் குடிநீர் குழாய் புதைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் பிரபாகரன், உதவிப் பொறியாளர்கள் நடராஜன், சத்தியநாராயணா, இளநிலைப் பொறியாளர் ராஜாதினேஷ், ஒதியம்பட்டு ஊர் முக்கியஸ்தர்கள் கபிரியேல், குலசேகரன், மூர்த்தி, மாரிமுத்து, விநாயகம், ஆனந்த், ராமலிங்கம், திருவேங்கடம், பாலு, நாகமுத்து, சுதாகர், வேலவன், வினோத், சிவானந்தம், விசு, அல்லாபிச்சை, ராஜன், முருகாணந்தம், பிரசாந்த், ஜீவா, சகாயராஜ், சுந்தரம், மோகன், சந்தோஷ், ராஜா, வி. மணவெளி கிராம முக்கியஸ்தர்கள் தர்மராஜ், கலியபெருமாள், ஜீவா, வாசு, அருள், பிரபாகரன், வேலு, மோகன், இருசப்பன், கோவிந்தன், தீனதயாளன், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ், தியாகராஜன், ஆறுமுகம், செல்வம், பாலசுப்ரமணி, சசி மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் முகம்மது ஹாலித், தொமுச அங்காளன், துணை அமைப்பாளர்கள் சரவணன், ராமதாஸ், கோபி, தேசிகன், துணைத் தலைவர் கதிரவன், பொருளாளர் கந்தசாமி, செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, கிளைக் கழகநிர்வாகிகள் தேவநாதன், ஜனா, பிஆர்டிசி பாஸ்கர், கார்த்திகேயன், செல்வநாயகம், துர்கா நகர் ரமேஷ், மிலிட்டரி முருகன், அருண், சேகர், ஜெயபால், திருமலை, மதியழகன், சந்திரசேகர், ரமேஷ், லத்தீப், அலீஸ்டர், விந்தியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp