April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விசிகவில் இருந்து அதிமுக வில் இணைவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விசிக நிர்வாகி எம்.எல்.ஏ அசோக்குமார் முன்னிலையில்
​கிருஷ்ணகிரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய நிர்வாக மாற்றமாக, அக்கட்சியின் நகர பொறுப்பாளர் . G. காதர் அவர்கள் இன்று விசிகவிலிருந்து விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) தன்னை இணைத்துக் கொண்டார்.
​கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த இணைவு விழாவில், அதிமுக மாவட்ட செயலாளரும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் அசோக்குமார் MLA அவர்கள் முன்னிலையில் காதர் முறைப்படி கட்சியில் சேர்ந்தார். அவருக்கு அதிமுகவின் கட்சித் துண்டு அணிவித்து எம்.எல்.ஏ சிறப்பான வரவேற்பு அளித்தார்.
​முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்த நிகழ்வின் போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்:
​நகர கழக செயலாளர் PNA. கேசவன்
​கழக பிரமுகர் SK. நவாப்
​நகர அவை தலைவர் ரியாஸ்
​வட்ட செயலாளர்கள் முருகன், S. ஏஜாஸ், மற்றும் கார்த்திகேயன்
​மேலும், ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மாற்று கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிக்கு கட்சித் தலைமை மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த இணைவு கிருஷ்ணகிரி நகர அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

Facebook
YouTube
Instagram
WhatsApp