தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்..
ஈரோடு. ஏப்ரல். 15
வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பெருமக்கள் வாக்கு சாவடிக்கு சென்று நூறு சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்று ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேனை மீட்பு சார்பில் ஈரோட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானங்கள்..
வரும் மே ஐந்தாம் தேதி திருவாரூரில் நடைபெறும் 43வது வணிகர்கள் விழிப்புணர்வு எழுச்சி மாநில மாநாட்டில் கலந்து கொள்ள ஈரோட்டில் இருந்து 3000 பேர் செல்வது என்றும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக மைய கட்டிடங்களை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் வாடகைக்கு விடும்போது வணிக பயன்பாட்டில் உள்ள வணிகர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
ஈரோடு பெருநகரின் சுற்றுச்சூழலை பாதிக்கும் தோல் தொழிற்சாலைகள் மற்றும் சாய தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோட்டிற்கு என்று ஒரு உணவு பகுப்பாய்வு கூட உடனடியாக அமைக்க வேண்டும்.
உணவுப் பொருட்களை பாதுகாக்கும் வகையில் ஈரோட்டில் ஒரு நவீன உணவு பாதுகாப்பு கிடங்கு அமைக்க வேண்டும். அதில் வணிகர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை கொடுத்து குறைந்த கட்டணத்தில் விட வேண்டும்.
வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பெருமக்கள் அன்றைய தினம் வாக்குச்சாவடிக்கு சென்று அனைவரும் வாக்களித்து 100% வாக்களிப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு செய்தியாளர்கள் மத்தியில் அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரா அமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா, ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரம ராஜா மற்றும் நிர்வாகிகள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.