February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வந்தவாசி எக்ஸ்னோரா கிளை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி: சப் கலெக்டர் தொடங்கி வைத்தார்..!

வந்தவாசி, ஜன 11:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வந்தவாசி புதிய பேருந்து நிலைய கூட்டுச் சாலையிலிருந்து தேரடி வரை நடைபெற்ற இந்த பேரணிக்கு கிளை தலைவர் சு.தனசேகரன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் சி.வினோத்குமார் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி.வெங்கடேசன், துணைத் தலைவர்கள் பா.சீனிவாசன், க.வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, செய்யாறு சப் கலெக்டர் அம்பிகா ஜெயின் பங்கேற்று, புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் போகி பண்டிகை நாட்களில் பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் டயர்களை கொளுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பேரணியில் சங்க நிர்வாகிகள் பெ.பார்த்திபன், மலர் சாதிக், இரா.பாஸ்கரன், ஆலோசகர் கு.சதானந்தன், பூபதி, வந்தை குமரன், மணி, பெருமாள், சத்தியமூர்த்தி ஜா.தமீம், ரகுபதி, முருகவேல், குமரவேல், செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் இப்பேரணியில் வந்தவாசி கிங்ஸ்டன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, புதிய பேருந்து நிலைய கூட்டுச் சாலை பகுதியில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக எக்ஸ்னோரா சார்பில் மக்கும் மக்கா – குப்பைகள் இடுவதற்கு டிரம்கள் மேனலூர் எஸ்கேம்.மணி நிதியுதவியால் வைக்கப்பட்டது. நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் க. பூபாலன் ஒருங்கிணைத்தார். இறுதியில் சங்க பொருளாளர் அ.பூவிழி நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp