சேலம்:தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருப்பது பொதுமக்களுக்கு கவலையை தந்து கொண்டிருக்கிறது.
சாதாரண சான்றிதழ்கள், பட்டா மாறுதல், உள்ளிட்ட பணிகளுக்காக லஞ்சம் கேட்கப்படும் நிலை தொடர்கிறது. இதோ நேற்று முன்தினம் சீனியர் இன்ஸ்பெக்டர் தாசில்தார் ஆபீசில் கைதான நிலையில், நேற்றைய தினமும் ஒரு விஏஓ கைதாகி உள்ளார்.
ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு, லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றாலும், ஒவ்வொரு ஆண்டும், லஞ்சம் பெறுவது குறித்த வழக்குகள் அதிகரித்து வருகின்றன..
தமிழகம் முழுதுமே கடந்த 2025ல் 391 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோல, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,055 அரசு ஊழியர்கள் மீது லஞ்ச வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தில், 61 வழக்குகளும், கோவையில், 52 வழக்குகளும், மதுரையில், 44 வழக்குகளும் பதிவாகி உள்ளன…
பட்டா – விஏஓ கேட்ட லஞ்சம்
கடந்த 2024ம் வருடத்தை எடுத்துக் கொண்டால் மொத்தம் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் இருந்தது. அதேபோல, 2025ம் ஆண்டிலும் முதலிடம் பிடித்துள்ளது..
இந்நிரலயில், நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. குமாரசேரி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேல், 35 வயதாகிறது..
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவேற்காடு பகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி வழங்கிய இலவச வீட்டு மனை பட்டா தொடர்பாக லஞ்ச வழக்கில் சிக்கினார்.
ஆன்லைன் பட்டா பதிவேற்றம்
குமாரசேரி கிராம மக்கள் ஆன்லைனில் பட்டாவை பதிவேற்ற விரும்பியபோது, ஆனந்தவேல் தலா ஒருவருக்கு ரூ.3,000 தரவேண்டும் என்று கேட்டார். இதில் 11 பேர் பணத்தை கொடுத்தனர், ஆனால் சிவகுமார் (51) பணம் கொடுக்காமல் இருந்தார். பிறகு அவர் ரூ.2,000 கொடுக்க சம்மதித்தார்.
சிவகுமார் லஞ்சம் கேட்பது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுப்பின் பேரில், அவர் ரூ.2,000 வழங்கும்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஜெய குமார் தலைமையிலான போலீசார் ஆய்வாளரை கைது செய்தனர். சம்பவம் குறித்து விசாரணை தொடர்ந்து நடக்கிறது..
சேலம் ஆத்தூர் தாசில்தார் ஆபீஸ்
அதற்குள் நேற்றைய தினம் விஏஓ ஒருவர் சேலத்தில் சிக்கி உள்ளார்.. ஆத்தூர் மந்தவெளி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், தாய் பச்சியம்மாள் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயருக்கு மாற்ற விரும்பினார்.
இதற்காக அவர் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற போது, அந்த அலுவலகத்தில் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றும் பெரியசாமியை அணுகினார்…. பெரியசாமி பெயர் மாற்றத்துக்கு ஆரம்பத்தில் ரூ.20,000 லஞ்சம் கேட்டாராம்.. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஈஸ்வரன், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பின்னர் போலீசாரின் ஆலோசனைப்படி 15,000 ரூபாயை அனுப்பினார்.
பெரியசாமி – நெஞ்சை பிடித்த அதிகாரி
பெரியசாமி பணத்தை வாங்கும் போது, அதே இடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சிக்க வைத்தனர். திடீரென தன்னை சுற்றிலும் அதிகாரிகள் நின்றதை பார்த்ததுமே பெரியசாமி அதிர்ச்சி அடைந்தார்.. முகம் முழுவதும் வெளிறிப்போய் விட்டது..
பிறகு அடுத்த நிமிடமே பெரியசாமி திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டார்.. பிறகு அப்படியே சேரில் மயங்கி உட்கார்ந்துவிட்டார்… உடனே போலீசார் அவரை கைத்தாங்கலாக தூக்கி, தங்களது காரில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.. அங்கு பெரியசாமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்..
பெரியசாமி இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வு பெற போகிறாராம்.. அதற்குள் இப்படி பொதுவெளியில் அசிங்கப்பட்டு சிக்கி உள்ளார்.. அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!