செஞ்சி.மார்ச்.13
விழுப்புரம் மாவட்டம்ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் செஞ்சி ஒன்றியம் சென்னாலூர் முதல் பாடிப்பள்ளம் செல்லும் சாலையில் 2/880 கி.மி புதியதார்சாலையை
மேம்பாடு செய்வதற்கு பூமி பூஜை விழா பாடிப்பள்ளம் ஊராட்சியில்நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் தாட்சயாயினிகார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கலந்துகொண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 2 கோடியே 66 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை மேம்பாடு செய்வதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில்
ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், விஜயராகவன்,வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை,ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ்,உதவி பொறியாளர் கற்பகம் பணி மேற்பார்வையாளர் சீதாராமன், வனத்துறைகாவலர்கள் சம்பத்,சக்திவேல்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆனந்தன்,ஒன்றிய நிர்வாகிகள்வாசு, அய்யாதுரை, கோடீஸ்வரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரசன்னா, செஞ்சி மத்திய ஒன்றிய துணை அமைப்பாளர் கௌதமன் கார்த்திகேயன்,ஊராட்சி நிர்வாகிகள் அலமேலு ராஜாராம்,செந்தாமரை கண்ணன், சங்கர், சென்னாலூர் மணி, கதிரவன், ஆனந்தன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election