புதுச்சேரி:
மார்ட்டின் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் இன்று பொதுமக்களுக்குச் சிறப்பு விருந்து வழங்கப்பட்டன.


காமராஜர் நகர் தொகுதியில் அமைந்துள்ள உணவு கூடாரத்தில் நாள்தோறும் ‘தலைவாழை இலை விருந்து’ வழங்கப்படுவது வழக்கம். இன்று மார்ட்டின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கமான உணவுகளுடன் கூடுதலாக இறால் வறுவல், பிங்கர் ஃபிஷ் (Finger Fish), ஐஸ்கிரீம் மற்றும் ஜூஸ் வகைகள் வழங்கப்பட்டது மேலும் வருகை தந்த பொதுமக்களுக்கு ஒரு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. அந்த டிபன் பாக்ஸின் உள்ளே இனிப்பு (Sweet) வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் ஜான்குமார் அவர்கள் கூறியதாவது,
”இன்று எனது தெய்வத்தின் பிறந்தநாள். அதை கொண்டாடும் விதமாக இந்த உணவு வகைகள் மக்களுக்குச் சிறப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் அனைத்து மக்களும் வயிறார சாப்பிட்டுவிட்டு, எனது தெய்வத்தை இன்னும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்று ஆசீர்வதிக்க வேண்டும். அதுவே எனக்குப் மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கும்.”
பிரம்மாண்ட கேக் மற்றும் பங்கேற்பாளர்கள்
விழாவின் ஒரு பகுதியாக ஜான்குமார் பேரவை சார்பில் மாபெரும் பிரம்மாண்ட கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான்குமார் நேரடியாகக் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவுகளைப் பரிமாறினார்.
காமராஜர் நகர் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election