திருச்சி மாவட்டம்
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள அழக கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி மலையாண்டி மகன் கண்ணுச்சாமி – 55. இவர் விவசாய நிலத்தில் தற்போது ரோஜா,நெற்பயிர்கள்,சோளத்தட்டை,போன்றவை பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென சோளத்தட்டை மற்றும் நெல் பயிரிடப்பட்டுள்ள இடத்தின் அருகில் திடீரென சிறிய பள்ளம் தோன்றி உள்ளது. சிறிய பள்ளம் என்று விட்டுவிட்டார் இந்த நிலையில் மீண்டும் இன்று காலை சென்று பார்த்த போது சுமார் பத்து அடிக்கும் மேல் பள்ளம் பெரிதாகி கிணறு போல் சென்றுள்ளது .இதை கண்டு விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விவசாய நிலம் பாறைகள் நிறைந்த கரடு முரடான பகுதி என்றும் திடீரெனத் இப்பகுதியில் பள்ளம் தோன்றியதால்
சுற்றுவட்டார பொதுமக்கள் பள்ளம் ஏற்பட்ட இடத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்
மணப்பாறை அருகே விவசாய நிலத்தில் திடீரென தோன்றிய பத்தடி பள்ளம்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!