மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., மற்றும் காமாட்சி அம்மாள் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின விழா கொண்டாடினர். விழாவிற்கு காமாட்சி அம்மாள் அறக்கட்டளை நிறுவன தலைவர் மோகித் ரவிக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ரேவதிபர்குணன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், மாநில மாணவர் அணி தலைவர் குகன், பாலகிருஷ்ணன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி தலைவி பிரபாவதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக என்.ஆர்.காங்., பொதுச்செயலாளர் ஜெயபால் பங்கேற்று பேசியதாவது: முதல்வர் ரங்கசாமி மகளிர்ருக்கு பாதி கட்டணத்தில் பத்திரபதிவு, மகளிர் உரிமை தொகை, பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50 ஆயிரம் டெபாசில் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கி இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கின்றார். மக்களுக்கு சேவை செய்ய மனம் இருக்கவேண்டும். சிலர் பதிவிக்கு வந்ததும், உடன் இருக்கும் கட்சியினரை மதிப்பதுகிடையாது, தொகுதி மக்களை அனுசரித்து நடந்துகொள்வது கிடையாது, கட்சியை மதிப்பதே கிடையாது, குறைந்தபட்சம் ஒரு பத்துபேருக்காவது நல்லது செய்யவேண்டும் அப்போதுதான் வளரமுடியும். ரவிக்குமாருக்கு சேவை மனதுடன், பணிவு, அடக்கம் மற்றும் அன்பு நிறைந்துள்ளதால் அவருடைய லட்சியம் நிச்சயம் நிறைவேறும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் சேர்மன் பாலமுருகன், வட்டார மக்கள் இயக்கம் முரளிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் சிவக்குமார், தங்கராசு, அரிகிருஷ்ணன், மோகன்தாஸ், நடராஜன், இளங்கோ,பாபு உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்ட தொகுதி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த ஆயிரத்து 700 மகளிருக்கு பரிசுபொருள் வழங்கி வாழ்த்தினர். மகளிர் அணி மகேஸ்வரி நன்றி கூறினார்.


More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election