கோவை :ஜன-10
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் 350-வது கிளையின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த புதிய கிளையை சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனர் கோயம்புத்தூர் துரைசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.சிரியா, ஐக்கிய நாடுகள் சபை ஜெனிவா சிறப்பு தூதுவர் அலுவலகம்,தலைமை நிர்வாக அதிகாரி ஆறுமுகம், அமெரிக்கா கசடற டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் மேனேஜிங் பார்ட்னர் சிவகுமார் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பெரியநாயக்கன்பாளையம் யூ.ஐ.டி. நிறுவனர் மற்றும் தலைவர் சண்முகம் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார்.
விழாவிற்கு வருகை புரிந்தவர்களை ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வரர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின் ஆகியோர் வரவேற்பளித்தார்கள்.மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு துணிகளுக்கு சலுகை விலை அறிவிக்கப்பட்டிருந்தது.தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சியை பற்றி சிறப்புரைகள் ஆற்றி சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்கள்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!