புதுச்சேரி, ஏப்ரல் 2:
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் அமைச்சருமான லட்சுமி நாராயணன், வீராம்பட்டினம் பகுதியில் தனது கட்சியின் வேட்பாளர் ஐயப்பன் அவர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மீனவ கிராமமான வீராம்பட்டினத்தில், அமைச்சர் லட்சுமி நாராயணன் வீடு வீடாகச் சென்று ‘ஜக்கு’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். வழிநெடுகிலும் மீனவ மக்கள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சாரத்தின் போது மீனவ மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:
“மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எங்கள் அரசின் முதல் இலக்கு. வீராம்பட்டினம் மீனவ கிராமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், மீன்பிடி உபகரணங்களுக்கான மானியங்களை உயர்த்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.”
என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசின் கடந்த கால சாதனைகளை எடுத்துக்கூறிய அமைச்சர், புதுச்சேரியின் வளர்ச்சி தொடர மீண்டும் ‘ஜக்கு’ சின்னத்திற்குப் பெரும்பான்மையான வாக்குகளை அளித்து ஐயப்பன் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மீனவ மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தொண்டர்கள் மற்றும் ஏராளமான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..