புதுச்சேரி வில்லியனூர் தொகுதி மக்களின் நலனுக்காகவும், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ரவிக்குமார் உறுதியளித்துள்ளார்.
வில்லியனூர் தொகுதி மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக, எனது சொந்தச் செலவில் இலவச கோச்சிங் சென்டர் அமைத்துத் தரப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் அங்கேயே அளிக்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்தார்.
முதல்வர் ரங்கசாமி அவர்கள் தொகுதி மீது வைத்துள்ள அக்கறையினால், ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் கீழ் சாலைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும்.
வெற்றி பெற்றவுடன் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், வில்லியனூரில் நவீன வசதிகள் கொண்ட நூலகம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கப்படும்.
புதுச்சேரிக்கு இணையாக வில்லியனூரில் உள்ள அரசு சுகாதார நிலையத்தில் படுக்கை வசதிகளுடன் கூடிய அனைத்து சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் முழுநேர மருத்துவக் கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஜி.என்.பாளையம் ஐயனார் கோவில் மற்றும் ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் முழுநேரமும் செயல்படும் புதிய புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட முதல்வரின் வேட்பாளராக நான் போட்டியிடுவதால், முதியோர்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் எனக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் எனது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இறுதியாக, “முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தே.ஜ. கூட்டணி ஆட்சியின் சாதனைகளைத் தொடர்ந்திட எனக்கு ‘ஜக்’ (Jug) சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..