புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வில்லியனூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தொகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் ஆசி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ரவிக்குமார், தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று வில்லியனூர் மாதா கோவில் அருகே உள்ள பீமா ராவ் நகர் பகுதியில் ரவிக்குமார் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, தமக்கு ஆதரவு தருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
வேட்பாளர் ரவிக்குமார் பீமா ராவ் நகருக்குள் நுழைந்தபோது, அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். மக்களின் இந்த எழுச்சியான வரவேற்பு ரவிக்குமாரின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த வாக்குச் சேகரிப்பின் போது, என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் உடனிருந்தனர்.
ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், வில்லியனூர் தொகுதியில் ரங்கசாமியின் ஆசியுடன் களம் காணும் தனக்கு மக்கள் அளிக்கும் இந்த பேராதரவு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என வேட்பாளர் ரவிக்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

More Stories
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் ஆர் கதிரவன் நாளை காலை 10.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல்
100 சதவீதம் வாக்களிப்போம்: விழிப்புணர்வு யோகாசனம்
வேட்பாளர் அறிமுகம்