பின்னர் வாக்காளர்களிடம் அதிமுக வேட்பாளர் அன்பழகன் அவர்கள் பேசியதாவது:
புதுச்சேரி உப்பளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம், திப்புராயப்பேட்டை பகுதிகளில் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிக்கும் போது புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் பேசியதாவது,
கடந்த ஐந்தாண்டுகாலமாக உப்பளம் தொகுதியின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவருக்கு கூட இங்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆட்டுப்பட்டி, பிரான்சுவா தோட்டம், ராசு உடையார் தோட்டத்தில் இருக்கும் 300-க்கும் மேற்பட்ட கூரை வீடுகளில் ஒரு வீடு கூட கல்வீடாக மாற்றப்படவில்லை. ஆண்டாண்டு காலம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான சன்னியாசித்தோப்பில் இருக்கும் மயானகொல்லை இடம் சட்டமன்ற உறுப்பினரின் அனுமதியோடு போலி பத்திரம் தயார் செய்து அபகரிக்கப்பட்டது. நான் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அந்த இடத்தை மீட்டு அங்காளம்மன் கோவிலுக்கு ஒப்படைப்பேன்.
மீனவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் சுற்றுலாப்படகு தொழிலையே நம்பி உள்ளனர். அந்த தொழிலை தற்போது அந்நிய சக்திகள் அபகரிக்க துடிக்கின்றன. அந்த தொழிலை மீனவர்களின் நலனுக்காக முழுமையாக பாதுகாப்பேன்.
திப்புராயப்பேட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள், தலித் கிறிஸ்தவர்கள், அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரம் இந்த ஐந்தாண்டுகாலத்தில் மேம்படுத்தப்படவில்லை. எனது பெரும் முயற்சியால் திப்புராயப்பேட்டை பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இன்னமும் ஏழை, எளிய தகுதியான அட்டவணை இனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்ட வெளியாட்களிடம் விலைபேசிக்கொண்டு இருக்கின்றனர். நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட உடன் ஒரே மாதத்தில் அங்கு கட்டிமுடிக்கப்பட்ட அத்தனை குடியிருப்புகளையும் நம் பகுதியில் உள்ள வீடற்ற அட்டவணை இனத்தை சேர்ந்தவர்கள், மீனவர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு விருப்பு வெறுப்பின்றி ஒப்படைப்பேன்.
இந்த ஐந்தாண்டுகாலத்தில் இழந்த உப்பளம் தொகுதியின் பெருமையை நிச்சயமாக மீட்டெடுப்பேன். தொகுதியின் வளர்ச்சிக்கே உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரச்சாரத்தின் போது
முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி,
நேத்தாஜி நகர் வார்டு கழக செயலாளர் பிரகாஷ்,ஞானசேகர்.செல்வம். பாஸ்கர். குணசேகரன்,காளிதாஸ். ரெமோ, ருத்ரகணபதி. ஜெரார்.சிவம். முருகன், சேது, பரிமளா,எலிசியா , முத்தாள் லட்சிய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் லட்சுமணன். உப்பளம் தொகுதி தலைவர் அலெக்ஸ் ,தொகுதி செயலாளர் குணசீலன்,தொகுதி துணை தலைவர் மிஷேல் ஆகியோர் உடனிருந்தனர்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..