April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரியில் 124-வது மாசி மகத் தீர்த்தவாரி விழா: ஏழை மக்கள் கழகம் சார்பில் அன்னதானம்!

புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வான 124-ஆம் ஆண்டு மாசி மக தீர்த்தவாரி விழா இன்று பக்தி பரவசத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது. கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், விழாக்கோலம் பூண்ட புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏழை மக்கள் கழகம் சார்பில் அன்னதானம்
விழாவிற்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக நகரின் முக்கிய இடங்களில் நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ஏழை மக்கள் கழக நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் தலைமையில் பிரம்மாண்ட அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஏழை எளிய மக்கள் மற்றும் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்புகள் போட்டிப் போட்டுக்கொண்டு செய்த இத்தகைய மக்கள் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது

Facebook
YouTube
Instagram
WhatsApp