புதுச்சேரி, மார்ச் 10:
இருசக்கர வாகனம் ஓட்டுவோர்களுக்கு, பொறுப்பான சாலை விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் தலைக்கவசத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக “சாலை பாதுகாப்பு வாரம்” என்ற தலைப்பில் ஒரு வார கால சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மார்ச் 11 முதல் மார்ச் 15, 2026 வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது.

இந்த பிரச்சாரம் முத்தூட் ஃபைனான்ஸின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) முன்முயற்சியின் கீழ் ஆதரிக்கப்படுகிறது. மேலும் இந்திய செஞ்சிலுவை சங்கம் – புதுச்சேரி மற்றும் போக்குவரத்து காவல்துறை- புதுச்சேரி, ஆகியோருடன் இணைந்து கிராமப்புற ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (IRDRP) அறக்கட்டளையால் செயல்படுத்தப்படுகிறது.
இதன் பொருட்டு சாலை பாதுகாப்பு வாரம் மார்ச் 11 ஆம் தேதி காலை 10:00 மணியளவில், அதன் தொடக்க விழாவானது புதுச்சேரி சட்டமன்றத்திற்கு எதிர்புறம் இரு சக்கர வாகன பேரணியுடன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை மதிப்பிற்குரிய புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பெண்கள், முதியவர்கள், தினசரி ஊதியம் பெறுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 500 ஹெல்மெட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளது. ஹெல்மெட் விநியோக நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டமன்றத் தலைவர் எம்பளம் ஆர். செல்வம் மற்றும் புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் கே. லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள். மேலும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் – புதுச்சேரி மாநிலத்தின் தலைவர் திரு.ஜி. லட்சுமிபதி, ஐஆர்டிஆர்பி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் திரு.இருதயசாமி, முத்தூட் நிதி நிறுவனத்தின் சிஎஸ்ஆர் தலைவர் திரு.ரோஹித் ராஜ் கே, புதுச்சேரியின் பிராந்திய மேலாளர் திரு.என். கமலாபிரகாஷ். திரு.எஸ்.ரமேஷ் கண்ணா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் – புதுச்சேரி மற்றும் ஐஆர்டிஆர்பி அறக்கட்டளையைச் சேர்ந்த சுமார் 100 தன்னார்வலர்கள், சாலைப் பயனாளர்களுக்கு பாதுகாப்பான சாலை நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பொது மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்கள்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election