


கொடைக்கானல் :
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா,வட கவுஞ்சி கிராமம், பட்டியக்காடு பழங்குடியினர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட பளியர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் குடியிருந்து வரும் இடம் பூமிதான இடமாகும். இந்த இடத்தை ஒட்டி சொக்கர் பாலாஜி என்பவர் பட்டா இடம் உள்ளது .அந்த இடத்தின் சர்வே நம்பர் எண் 424, பூமிதான இடம் சர்வே எண் 424 செக்கர் பாலாஜி என்பவருக்கும் பழங்குடியின மக்களுக்கும் பூமிதான இடத்தை அவர் தனது பட்டா இடம் என்று கூறி வேலி அடைத்துவிட்டார். இதனை மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் செம்பிரான்குளம் கிராமத்திற்கு ஆய்விற்காக வந்த பொழுது நேரடியாக முறையிட்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்களும் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து மக்களுக்கு கொடுக்கும்படி அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் பண்ணைக்காடு வருவாய் ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன், வட கவுஞ்சி கிராம நிர்வாக அலுவலர் திரு. ராமசாமி தலைமையில் நில அளவையர்கள் திரு. இராமூர்த்தி குழுவினர் நிலத்தை அளவீடு செய்து பழங்குடியின மக்கள் வழக்கம் போல் அனுபவித்து வரும் நிலத்தை அவர்களுக்கு மீட்டுக் கொடுத்தனர் இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு செ. சரவணன் ஐயா அவர்களுக்கும், கொடைக்கானல் வட்டாட்சியர் திரு. பாபு அவர்களுக்கும், நிலக்கோட்டை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் திரு.ஜெயராஜன் அவர்களுக்கும், பண்ணைக்காடு வருவாய் ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும், கிராம நிர்வாக அலுவலர் திரு. ராமசாமி அவர்களுக்கும் நில அளவையர்கள் திரு. இராமூர்த்தி, வடகவுஞ்சி கிராம உதவியாளர் திரு. ஹரி ஆகியோருக்கும் பட்டியக்காடு பழங்குடியின கிராம மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இந்நிகழ்ச்சியில் பட்டியக்காடு பழங்குடியின மருதம் பெண்கள் குழு, தேன் மலை பெண்கள் குழு உறுப்பினர்களும் கோடை குறிஞ்சி பெண்கள் இயக்கத்தின் செயலாளர் திருமதி தனலட்சுமி, தீபம் குழு பொறுப்பாளர் திருமதி. லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியாக அனைத்து அதிகாரிகளுக்கும் கிராம மக்களின் சார்பாக மருதம் பெண்கள் குழு பொறுப்பாளர் திருமதி. மகாலட்சுமி அனைத்து அதிகாரிகளுக்கும், உதவி செய்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார். பட்டிய காடு பழங்குடி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆரோக்கிய அகம் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சதாசிவம் உடன் இருந்தார்

More Stories
Election
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் அறம் சார்பாக “சூப்பர் ஓவர் – சீசன் 2” கிரிக்கெட் போட்டி
எல்.பி.ஜி கேஸ் தட்டுபாடு காரணமாக டைல்ஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் வரும் நாட்களில் டைல்ஸ் தட்டுபாடு எற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் கோவை டைல்ஸ் டீலர்ஸ் சங்கத்தின் தலைவர் சுரபி பங்கஜ் தெரிவித்துள்ளார்!!!