வந்தவாசி, டிச 09:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்காக வழங்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் செலவினங்களுக்கு பள்ளியின் கட்டுமானத்திற்கு பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் சி.வீரமணி, வட்டார கல்வி அலுவலர்கள் கோ.குணசேகரன், எ.பச்சையப்பன், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ராஜா, கல்வியாளர் பொன்.சந்திரசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.நம்பெருமாள், உதவி ஆசிரியை பாரதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் துர்காதேவி, தெள்ளார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டிகேஜி ஆனந்தன் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் பள்ளியின் சுற்றுச்சூழல், சத்துணவு பாராமரிப்பு, மாணவர்களின் கற்றல் திறன் உள்ளிட்டவைகளை டிஇஓ ஆய்வு மேற்கொண்டார்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!