April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

நரிக்குறவர் மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு: புதுவை தமிழ்ச் சங்க தலைவர் பங்கேற்பு

வந்தவாசி, மார்ச் 04:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் நரிக்குறவர் மாணவர்களுக்கு கற்றல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் கோ.குணசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, கல்லூரி தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பங்கேற்று, இன்றைய சூழலில் நரிக்குறவர் மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதைப் பயன்படுத்தி மாணவர்கள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கற்றல் பொருட்கள் வழங்கப்பட்டது. இறுதியில் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp