வந்தவாசி, பிப் 26:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம், குரு ஏஜன்சி மற்றும் எஸ்ஆர்எம் கணினி மையம் சார்பில் வந்தவாசி பகுதியில் 10, +1,+2 அரசு பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி வந்தவாசி ரங்கநாத பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஹயக்ரீவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதி பள்ளியில் பயிலும் சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ…மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த வைபவத்தில் பூஜிக்கப்பட்ட கயிறு, ஹயக்ரீவர் போட்டோ, பேனா, பிரசாதம் உள்ளிட்டவை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. மாணவர்கள் தங்களது தேர்வுக்கூட ஹால்டிக்கெட் வைத்து வழிபட்டனர். நிகழ்வை ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன், குரு முகமை ஈ.குருசங்கர், எஸ்.ஆர்.எம். கணினி மைய நிர்வாகி எ.தேவா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும் கோவில் பட்டாச்சார்யாக்கள் ரங்கநாத குருக்கள், சதிஷ்ஐயர், வினோத் பட்டாச்சார்யா ஆகியோர் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகளை மேற்கொண்டனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்