April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேசிய மக்கள் முன்னணி புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது

தேசிய மக்கள் முன்னணி புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வு லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹால் மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நடன கலை நிகழ்ச்சிகள் மற்றும் பறை இசை வரவேற்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.இந்திய தேசத்தின் முதல் பெண் ஆசிரியர் எனப் போற்றப்படும் சாவித்திரிபாய் பூலே அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
இந் நிகழ்ச்சிக்கு தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் இவோன் சுவாமிநாதன் தலைமை தாங்க செயலாளர் ரெஜினா டேவிட் ஜோசப் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திரா காந்தி அரசு செவிலியர் கல்லூரியில் முன்னாள் முதல்வர் முனைவர் பிரமிளா தமிழ்வாணன், ராக் பள்ளியின் முதல்வர் உஷாராணி, ராக் நர்சிங் கல்லூரியின் முதல்வர் மங்கையர்கரசி, வித்யா பவன் பள்ளியின் உரிமையாளர் ரேகா ராஜசேகரன், ஜிப்மர் மருத்துவமனை தனிச்செயலாளர் இளவரசி சங்கர், சமூக செயற்பாட்டாளர் அனிதா பாலகிருட்டிணன், பாரதிதாசன் மகளிர் கல்லூரி தமிழ்த்துறை துணை பேராசிரியர் சந்திரா, காஞ்சிமாமுனிவர் உதவிப் பேராசிரியர் கயல்விழி , பாவேந்தர் பாரதிதாசன் ஆசிரியை நீலா, மூத்த செவிலியர் சாந்தி மாதவன், ஆசிரம சகோதரி நிவேதிதா உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் முன்னணி தலைவர் சுவாமிநாதன் மகளிர் தின வாழ்த்துரை வழங்கினார்.
தேசிய மக்கள் முன்னணி நிர்வாகி தனபிரதிக்‌ஷா மகளிர் தினவிழா ஏன் கொண்டாடுகிறோம் என்ற கருத்தை பகிர்ந்துக் கொண்டார்.
பின்னர் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மகளிர் ஆளுமைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு , 210 ஆளுமைகளை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டன.
அன்னை தெரசா வாழ்நாள் சாதனையாளர் விருது சாவித்திரிபாய் புலே வாழ்நாள் சாதனையாளர் விருது ரமாபாய் வாழ்நாள் சாதனையாளர் மணியம்மையார் வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர் முத்துலட்சுமி வாழ்நாள் சாதனையாளர் விருது டாக்டர் முத்துலட்சுமி நல்லாசிரியர் விருது சாவித்திரிபாய் பூலே கல்வி நல்லாசிரியர் விருது உயிர்காக்கும் அன்னை விருது சாதனை பெண்மணி விருது இளம் சாதனையாளர் விருது வீர தமிழச்சி விருது,கலைத்திலகம் விருது( சிறந்த சமூகப் பணியாளர் விருது ஹெலன் கெல்லர் விருது சிறந்த செவிலியர் செம்மல் நேர்மையும் சிகரம் விருது, சிறந்த பணியாளர் விருது, மணியம்மையார் சாதனை இணையர் விருது ரமா பாய் சாதனை இணையர் விருது
என பல்வேறு தலைவர்களின் பெயர்களில் மகளிர் ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் சிறந்த ஒப்பந்த ஆசிரியர்கள், சிறந்த கொரோனா கால ஒப்பந்த ஊழியர்கள், என். ஆர்.எஸ். எம் ஊழியர்கள், ஹவுஸ்கிப்பிங் ஊழியர்கள், இடுகாட்டில் பணி செய்யும் பெண்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், சமூக ஆர்வலர்கள்,தனிபெற்றோராக இருந்து சாதிக்கும் பெண்கள் எனப் பலதரப்பு பெண் ஆளுமைகளை ஆராய்ந்து அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் தேசிய மக்கள் முன்னணி மாநில செயலாளர் இவோன் எழுதிய “குருதியின் குரல்” என்ற கவிதை நூல் Dr.பிரமிளா தமிழ்வாணன் வெளியிடப்பட்டு அனிதா பாலகிருஷ்ணனால் பெற்றுக் கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டது. புத்தகத்தின் நூல் ஆய்வாளராக இளவரசி சங்கர் புத்தகம் தொடர்பாக விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் முன்னணி தலைவர் சுவாமிநாதன் பொதுச் செயலாளர்கள் இன்னாசி ராக், மன்னாடிபட்டு சிவா, கட்சியின் துணைத் தலைவர்கள் ஜெபின் லாசரஸ், ராஜேஷ், பொருளாளர் சுரேஷ், மாநிலச் செயலாளர் ஆறுமுகம், டேவிட் ஜோசப், மணி ,பிரதீப் மதன்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தோழர்கள் பங்கெடுத்தனர்.
இறுதியாக செல்வி.பரமேஸ்வரி நன்றி கூறினார்.

Facebook
YouTube
Instagram
WhatsApp