வந்தவாசி , மார்ச் 15:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிண்டர் கார்டன் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி முதல்வர் சி. ஏழுமலை தலைமை தாங்கினார். துணை முதல்வர் ப. முருகன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தெள்ளார் வட்டார மருத்துவ அலுவலர் ஹித்தேன் டி ஷா பங்கேற்று சிறப்புரை ஆற்றி, மாணவர்களுக்கு பட்டச்சான்றிதழ்களை வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆர். ராகஸ்ரீ, டி.எச்.பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியில் பள்ளி ஆசிரியை சந்தியா நன்றி கூறினார்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election