February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர் முன்னே சென்ற வாகனத்தில் நிலை தடுமாறி மோதியதில் சம்பவ இடத்திலே பலி:

திருச்சி டிச – 27:

திருச்சி மாவட்டம் , வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை, சொறியம்பட்டி விளக்கு அருகே திருச்சியிலிருந்து – மதுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் முகமதியாபுரத்தை சேர்ந்த மீரா மைதீன் மகன் காதர் மைதீன் (23), மேலூரில் கறிக்கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், வ. உ . சி .நகரைச் சேர்ந்த காதர் மகன் அப்சர் (20) , ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி முன்னே சென்ற வாகனத்தின் மோதியதில் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
மேலும் தகவல் அறிந்து வந்த வளநாடு போலீசார் இருவரின் உடலை மீட்டு வழக்கு பதிந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp