வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்…
ஈரோடு. ஏப்ரல். 02
திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் இன்று ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் 2026, வருகின்ற இம்மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே நான்காம் தேதி பதிவான வாக்குகள் என்ன பட உள்ளது.
இந்த நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டணியின் தலைவராக உள்ள திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் நான் போட்டியிடும் தனது கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவர் வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று இரவு அவர் ஈரோடு வந்தார். ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் தங்கிய அவர் இன்று காலை 9 மணி அளவில் ஈரோடு அருகே உள்ள திண்டலில் அமைக்கப்பட்டுள்ள பிரச்சார மேடையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
என்னைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல்வரும் திமுக தலைவரும் கூட்டணி கட்சிகளின் தலைவருமான மு க ஸ்டாலினை வரவேற்க ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசுகிறார்.

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..