April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தர்பூசணி சின்னத்தில் களம்: காமராஜ் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்டின் வீடு தோறும் பிரச்சாரம்

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், காமராஜ் நகர் தொகுதியில் தர்பூசணி சின்னத்தில் வேட்பாளராக களம் இறங்க உள்ள நிலையில், தொகுதி முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, இன்று சாரம் பகுதிக்குட்பட்ட ஞானப்பிரகாச நகர் பகுதியில் வீடு தோறும் சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, “லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவராகிய நான் தர்பூசணி சின்னத்தில் போட்டியிட உள்ளேன்; எனக்கு உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள், “உங்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள்” என உறுதியளித்தனர். மேலும், பகுதி முழுவதும் பொதுமக்கள் ஆரவாரமாக வரவேற்பு அளித்து ஆதரவு தெரிவித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp