செஞ்சி மார்ச் 12
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் உலக மகளிர் தின விழா தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சங்கர்நாராயணன் தலைமையில் நடைபெற்றது .
பட்டதாரி ஆசிரியர் ஷாலினி அனைவரையும் வரவேற்றார் .
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர் வாசு கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக வல்லம் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர் தென்னரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பெண் ஆசிரியர்கள் சத்துணவு அமைப்பாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சமையல் உதவியாளர்கள் என அனைத்து பெண்களுக்கும் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி நினைவு பரிசு வழங்கி பெண்கள் தின வாழ்த்துக்கள் கூறினர்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வ இளங்கோவன் வல்லம் ஒன்றிய செயலாளர் வசந்த் வல்லம் ஒன்றிய துணை செயலாளர் நமச்சிவாயம் வானவில் மன்ற கருத்தாளர்கள் மகாலட்சுமி கிரிஜா பள்ளி ஆசிரியைகள் சபிதா கலைவாணி சத்யா மற்றும் அருகில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் பூங்குழலி தொழில்நுட்ப ஆய்வக உதவியாளர் தபசும் சத்துணவு அமைப்பாளர் கனகசுபா சமையல் உதவியாளர் ராணி உஷா கவிதா அங்கன்வாடி பணியாளர் இலக்கியா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் உலக மகளிர் தின விழா

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election