கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பார்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சந்தூரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
நடைபெற்றது.
கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, கட்சியின் கொள்கைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளர் E. முரளிவிஜய்.B.E. LLB தலைமையில் நடைபெற்ற
இக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சேலம் மண்டல தொழில்நுட்ப அணி செயலாளர் ஜெயசூர்யா, பார்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் T. வெங்கடேசன், பார்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வசவராஜ், பார்கூர் மத்திய ஒன்றிய செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுகுமார், மிதுன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் பார்கூர் தெற்கு ஒன்றிய பொருளாளர் M. சூர்யா, செயற்குழு உறுப்பினர் V.மஞ்சுநாதன், ஊராட்சி பொறுப்பாளர் M.கார்த்திக், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி. தேவராஜன் மற்றும் தொழிலதிபர் அசோகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
காட்டாகரம் ஊராட்சி, சந்தூரில் திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே உரையாற்றிய நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் எனப் 500க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது பலர் திரளாகப் பங்கேற்று இக்கூட்டத்தைச் சிறப்பித்தனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
புதுச்சேரி உழவர்கரை தொகுதி: குக்கர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் சுயேச்சை வேட்பாளர் சரவணன்!
ஹோட்டலில் தோசை ஊற்றி ஓட்டு சேகரிக்க பாஜக வேட்பாளர் கிருத்திகா
மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு..