February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

​தட்டாஞ்சாவடி தொகுதியில் நமது மக்கள் கழகம் (NMK) சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் – சட்டமன்ற உறுப்பினர் திரு. G.நேரு (எ) குப்புசாமி தொடக்கி வைத்தார்!

​புதுச்சேரி | 25.02.2026

​தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட முத்துலிங்கப்பேட்டை பகுதியில், நமது மக்கள் கழகம் (NMK) மற்றும் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பல் சிகிச்சை முகாம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

​நமது மக்கள் கழகத் தலைவரும், உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான G.நேரு (எ) குப்புசாமி MLA அவர்களின் நல்லாசியோடு இந்த முகாம் நடைபெற்றது. NMK பொதுச் செயலாளரும் தட்டாஞ்சாவடி தொகுதி பொறுப்பாளருமான E.விநாயகம் MA அவர்கள் இதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
​9:00 மணியளவில் தொடங்கிய இந்த முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் G.நேரு (எ) குப்புசாமி அவர்கள் நேரில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார்.


தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று, பல் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பயனடைந்தனர்.
​இந்நிகழ்வில் தொழிலதிபர் N.ரஞ்சித்குமார் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி NMK பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

​”எங்கள் பகுதியில் இதுவரை இதுபோன்ற பிரத்யேக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில்லை. எங்களின் தேவையறிந்து இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த திரு. E.விநாயகம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என இப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
​மதியம் 1:00 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில், மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளையும், வாய் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வையும் வழங்கினர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp