லைக் போடாதீங்க ஓட்டு போடுங்க – சேலம்,ஆத்தூர் பரப்புரையில் சீமான் கலகல.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும்,கெங்கவல்லி தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்:
என் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என முன்னோர்கள் கண்ட கனவை நிறைவேற்ற வந்துள்ளோம் காசை வைத்து அரசியல் செய்ய வரவில்லை. ஐந்தாண்டுகளாக மக்கள் பிரச்சனையை தீர்க்காதவர்கள் இப்பொழுது உங்கள் கனவை சொல்லுங்கள் உங்கள் பிரச்சனை என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்டு வருகிறார்கள். எல்லா வளமும் இருந்து என் நாடு வறுமையில் இருக்கிறது அரசின் அனைத்து துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு நன்மை கிடைக்கவில்லை, கல்வி மருத்துவம் அனைவருக்கும் அரசு வேலை இதை நான் செய்வேன். கட்டணமில்லா மருத்துவ வசதி செய்து கொடுப்பேன்.நான் விழுந்தாலும் என் இனம் எழுந்து நிற்க வேண்டும். எத்தனை கோடி பதவி கொடுத்தாலும் சரண் அடையாதவன் தான் சீமான்.
இந்த நாட்டில் உயர் குடிமகனுக்கு கிடைக்கும் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம்.கட்டணமில்லா மருத்துவம் ,வாசல் தேடி தூய குடிநீர் வரும், கல்வி கற்பதில் கட்டமைப்பை எல்லாம் மாற்றப்படும். பொருளாதாரம் தெரியாதவர்களுக்கு எல்லாம் ஓட்டை போட்டு நாட்டை கெடுத்து விட்டீர்கள். ஆனால் நான் இலவசம் எதுவும் தர மாட்டேன். கல்வி, மருத்துவம், வேலை தருவேன், சாராயம் விற்பனை செய்த காசு வேண்டாம். சாராயக்கடையை மூடுவேன். பால் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.அனைவருக்கும் அரசு வேலை தருவேன்.
அரசியல் தலைவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற இந்த சட்டத்தை கொண்டு வருவேன். தனியார் மருத்துவமனைக்கு நிகராக அரசு மருத்துவமனையை உயர்த்துவேன். மருத்துவத் துறைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பட்ஜெட்டில் அரசு நிதி ஒதுக்கிறது.கோடிகள் தான் உயருகிறதே தவிர அரசு மருத்துவமனையின் தரம் உயரவில்லை.
ஏசி இல்லாமல், கார் இல்லாமல், பைக் இல்லாமல் வாழலாம். ஆனால் சோறு இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது .இதை கொடுப்பவன் விவசாயி. மடிக்கணினி, மிக்ஸி, போன்றவற்றை இலவசமாக கொடுத்தவர்கள் வாஷிங் மெஷின் கொடுப்பேன் என்று சொல்பவர்கள் தூய குடிநீரை இலவசமாக கொடுத்தேன் என்று சொல்கிறார்களா? அப்படி சொன்னால் அவர்களுக்கு வரும் கமிஷன் போய்விடும்.
ஆண்டுக்கு 2000 டிஎம்சி தண்ணீரை வீணாக்கி விட்டு 50,000 கோடி செலவில் கடல் தண்ணியை சுத்தம் செய்வதாக கூறி செலவழிக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏரி குளங்கள் எல்லாம் தண்ணீர் தேங்கி நிற்க வகை செய்து நீர் பற்றாக்குறையை போக்குவோம்.
நான் சொன்னால் செய்வேன் என்னை நம்புங்கள். தலைவர்களுக்கு பல துணை இருக்கு ஆனால் நாட்டில் அணை இல்லை. கல்வி, மருத்துவம் சந்தைக்கு வந்து விட்டது பத்தாண்டுகளில் பசுமை திட்டம் மூலம் செயல்படுத்துவேன்.
“யூடியூப்-யில் Seeman latest Speech என டைப் செய்து சீமான் பேச்சைக் கேட்டு பாருங்க கேட்டுவிட்டு லைக் போடாம ஓட்டை போடுங்க ” என்று கூறினார். எல்லோருடைய ஆட்சியை பார்த்து விட்டோமே ஒருமுறை எங்களுக்கு ஓட்டு போட்டு பாருங்கள்.எங்கள் ஆட்சியைப் பாருங்கள் உங்கள் வாக்கை எங்களுக்கு தாருங்கள் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் , கெங்கவல்லி தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election