April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்,06/04/2026.

என் தொகுதி மக்கள் என்னை கைவிடமாட்டாா்கள் – வேட்பு மனு தாக்கலுக்கு பின் அருள் எம்எல்ஏ பேட்டி.

சேலம் மேற்கு தொகுதி மக்கள் தன்னை கைவிடமாட்டாா்கள் என சுயேட்சையாக மனு தாக்கல் செய்த எம்எல்ஏ இரா.அருள் கூறினாா்.

சேலம் மேற்கு தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், ராமதாஸ் ஆதரவாளருமான இரா அருள், தோ்தலில் போட்டியிட சுயேட்சையாக சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். , சூரமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கு தொகுதி தோ்தல் அலுவலா் ஜானகியிடம் மனு தாக்கல் செய்தாா்.

பின்னா் இரா. அருள் செய்தியாளா்களிடம கூறியதாவது: ராமதாஸின் ஆசியோடு கடந்த 2021 இல் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றேன். தொடா்ந்து, தொகுதி மக்களுக்கு சேவனாக இருந்து பணியாற்றி வருகிறேன். அந்த அடிப்படையில் ராமதாஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் மீண்டும் போட்டியிடுகிறேன்.ஆனால் தனக்கு மாம்பழ சின்னம் தற்போது இல்லை. நான் வேறொரு சின்னத்தில் போட்டியிடுகிறேன். எனது சின்னம் என்பது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை தெரியவரும் . நாங்கள் சமையல் எரிவாயு சின்னத்தை கேட்டுள்ளோம். அன்புமணி தரப்பில் நிற்கும் வேட்பாளா் மாம்பழச் சின்னத்தை போட்டு, அருளின் சின்னம் என துண்டு பிரசுரம் அடித்து விநியோகித்து வாக்கு கேட்டு வருகிறாா். அந்த அளவில், இந்த தொகுதியில் பிரபலமாக உள்ளேன். எனவே இந்த தொகுதியில் எனக்கு நல்ல அறிமுகம் உள்ளது. தொகுதி மக்கள் என்னை கைவிடமாட்டாா்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினாா்.

இன்று ஒரே நாளில் 99 போ் மனு: இதனிடையே சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் சனிக்கிழமை ஒரே நாளில் 99 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். இதில், ஆண்கள் 77 பேரும், பெண்கள் 22 பேரும் அடங்குவா். அதிகபட்சமாக, சேலம் மேற்கு தொகுதியில் சனிக்கிழமை ஒரே நாளில் 19 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Facebook
YouTube
Instagram
WhatsApp