April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம் – சந்தேகப் பேயாக மாறி அடித்துத் துன்புறுத்திய கணவன்,ஆத்திரத்தில் மனைவி விபரீத முடிவு.

சேலம் அருகே காதல் கணவனின் தலையில் குழவிக் கல்லைப் போட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் பதைபதைக்க வைத்துள்ளது.

நாள்தோறும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்ததால் மனைவியே கொலைபாதக செயலில் ஈடுபட்டுள்ளார். நடந்தது என்ன?

சேலம் மாநகர் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான தங்கம். இவருடைய மனைவி 36 வயதான பத்மா. காதலித்து திருமணம் செய்த இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தங்கம் டேப் கட்டில் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது மனைவியும் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

அண்மைக் காலமாக தங்கம், தனது காதல் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். மேலும், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து அடித்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது தாயார் இறந்ததால் பத்மா, அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார். இதனால், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தங்கம் அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கம்போல் நேற்று இரவிலும் குடித்துவிட்டு வந்து மனைவியை உயிர் நோக தாக்கியுள்ளார். இதில், கடும் ஆத்திரம் கொண்ட பத்மா, விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கணவன் நாள்தோறும் துன்புறுத்தியதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இரவில் மது போதையில் படுத்த தங்கம், அதிகாலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அதே வேளையில் கடும் கோபத்தில் இருந்த பத்மா, குழவிக் கல்லை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த கணவனின் தலையில் போட்டுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தங்கம், தூக்க நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த அம்மாப்பேட்டை போலீசார், உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் பத்மா-வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

: விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் ஒருவர் கைது… குற்றவாளி சிக்கியது எப்படி…?

கணவன் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுத்ததால்தான் மனைவி கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தூங்கிக் கொண்டிருந்த காதல் கணவனின் தலையில் குழவிக் கல்லைப் போட்டு, மனைவியே கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Facebook
YouTube
Instagram
WhatsApp