February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சேலம்:குடிசை மாற்று வாரியம் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

நவ: 8

சேலம் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியம் என்கின்ற நகர்புறம் மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தின் நேற்று காலை பொதுமக்கள் ஐந்து கோரிக்கைகள் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்

1.சேலத்தில் பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் 2024 ஆம் ஆண்டு மூலம் மானியத் தொகை பெற பணி ஆணை பெற்று வீடு கட்டிக் கொண்டிருக்கும் சிலருக்கு கடந்த பத்து மாதங்களாக மானியத் தொகை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளனர் இதனால் வீடு கட்டி கொண்டிருக்கும் பயனாளிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் எனவே நிலுவையில் உள்ள மானிய தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்.

  1. தற்போது வந்துள்ள பிரதமரின் அனைவரும் வீடு கட்டும் திட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது மேலும் கட்டுமான சம்பந்தப்பட்ட பொருட்களின் விலை உயர்ந்து உள்ளதால் மானிய தொகையை ரூ 5 லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் .
  2. வீடு கட்டுவதற்கு அதிகாரிகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யுங்கள் உங்கள் இடத்தை நாங்கள் நேரில் வந்து பார்க்கிறோம் என்று கூறுகிறார்கள் நாங்கள் ஆன்லைன் பதிவு செய்த பின் 40 நாட்கள் ஆனாலும் எங்கள் இடத்தை பார்வையில் அதிகாரிகள் வருவதில்லை நாங்கள் போன் மூலம் தொடர்பு கொண்டால் இன்று வருகிறோம் என்று கூறுகிறார்கள் எனவே நாங்கள் விடுமுறை எடுத்து வீட்டில் இருப்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது ஆகையால் இனி வரும் காலங்களில் பதிவு செய்தால் விரைந்து பார்வையிட உத்தரவிட வேண்டும்.
  3. தற்போது இதுவரை பதிவு செய்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு பணி ஆணை விரைந்து வழங்கிட வேண்டும்.
  4. மானியம் பெற்று வீடு கட்ட இருக்கும் ஒரு சில பயனாளிகளுக்கு விருப்பத்திற்கு ஏற்ப 300 சதுர அடியிலிருந்து 800 சதுர அடி வரை வீடு கட்ட அனுமதி வழங்கிட வேண்டும்.
  5. தற்போது பணியில் உள்ள அதிகாரிகள் அடித்தளம் பேஸ்மெண்ட் போட்டுள்ள பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்கின்றார்கள் பின்னர் அவர்களே அடித்தளம் போட்டிருந்தால் மானியம் வழங்கப்படாது என்கின்றனர் அதிகாரிகள் பேச்சை நம்பி அடித்தளம் போட்டு உள்ள பயனாளிகளுக்கு பணிவான வழங்கி வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என ஆறு அம்ச கோரிக்கைகளை வைத்து சேலம் மாவட்ட குடிசை மாற்று வாரிய மேலாளரிடம் சேலம் பச்சப்பட்டி மக்கள் அறக்கட்டளை சேவை நிறுவனத் தலைவர் டாக்டர் வி கே பிரகாஷ் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp