தங்கம் விற்கிற ரேட்டுக்கு இது தேவையா.
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பிரபல நகைக்கடை ஒன்று செய்கூலி,சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி என விளம்பரம் செய்து இருந்தது.
இதனை அறிந்த வாடிக்கையாளர்கள், நேற்று மாலை கடைக்கு குவிந்த நிலையில், கடைசியில் மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்படி கடை உரிமையாளர் என்னதான் செய்தார்.. விவரங்களை இங்கே பார்க்கலாம்.
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை கிட்டதட்ட 50 ஆயிரம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தங்கம் விலை சுமார் ரூ.57,200 என்று இருந்தது.
நிற்காமல் உயரும் தங்கம் விலை
அப்போது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் தங்கம் விலை லட்ச ரூபாயை தொட்டாலும் வியப்பதற்கு இல்லை என நகைப்பிரியர்கள் பேசிக்கொண்டு இருந்த நிலையில், இந்த ஆண்டே நகை பிரியர்கள் கனவில் கூட நினைக்காத அளவிற்கு விலையானது உயர்ந்துள்ளது. 1 லட்சத்தை தாண்டியும் தங்கம் விலை நிற்காமல் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலைதான் இப்படி என்றால் வெள்ளி விலையும் ஏட்டிக்கு போட்டியாக தற்போது உயர்ந்து வருகிறது. என்னதான், தங்கம் வெள்ளி போட்டிக்கொண்டு உயர்ந்தாலும் மக்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைந்தபாடில்லை. தங்க நகைகளை வாங்க ஆர்வத்துடன் நகை கடைக்கு செல்வதையே பார்க்க முடிகிறது. இதனால், வாடிக்கையாளர்களை கவர நகைக்கடைகளும் பல்வேறு சலுகைகளை அளித்து வருகின்றன.
100 சதவீதம் தள்ளுபடி ஆஃபர்
அந்த வகையில், சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடை வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் ஒன்றை அறிவித்தது. அதை நம்பி போனவர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏவிஆர் ஸ்வர்ண மகால் என்ற நகைக்கடை உள்ளது.
இந்த கடையில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்கினால் செய்கூலி, சேதாரம் 100 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்று கடை சார்பாக விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாகவும் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது.
கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டம்
இதனை அறிந்த வாடிக்கையாளர்கள், 100 சதவீதம் தள்ளுபடி என்பதால் பிற்பகல் முதலே குவிய தொடங்கினர். மாலை 6 மணியளவில் கடை முன்பாக கூட்டம் கூட தொடங்கியது. கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால், கடையின் உரிமையாளர், ஷட்டரை இழுத்து மூடிவிட்டு சென்றுவிட்டார். இதனால் தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
வாடிக்கையாளர்கள் ஆதங்கம்
தொடர்ந்து கடை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இது குறித்து கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், “காலையில் 11 மணிக்கே நாங்கள் வந்தோம். அப்போது எல்லா நகைகளும் விற்று தீர்ந்துவிட்டன. எல்லாரும் டோக்கன் போட்டுவிட்டு போய்விட்டார்கள். உள்ளே கலெக்ஷனே இல்லை.
பாதி பேர் வெளியே வரும் போது ஷட்டரை பூட்டிவிட்டார்கள். நகையை அடைமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தை வைத்து வாங்க வந்தோம். திருவண்ணாமலையில் இருந்து பஸ் பிடித்து வந்தால் கடையில் டோட்டல் வேஸ்ட்” என்று ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!