February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சென்னை இலயோலா கல்லூரி சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் கிராம முகாம்

செஞ்சி டிச 18
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா பாண்டியன்குளம் கிராமத்தில் உள்ள கேர் கவுன்சில் பள்ளியில் சென்னை இலயோலா கல்லூரியில் சமூக பணித்துறை பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில் கிராம முகாம் நிறைவு விழா நடைபெற்றது . முன்னதாக இந்த முகமானது டிசம்பர் 8 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மாணவர்கள் கிராமப்புற வாழ்வியல், விவசாயம் பற்றி பாண்டியன் குளம் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு கேட்டரிந்தனர். மற்றும் கிராமப்புறங்களுக்கு உள்ள பொதுமக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் பெண்ணுரிமை பாதுகாப்பு கலை போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து 17-ஆம் தேதி முகாம் நிறைவு விழா நடைபெற்றது இவ்விழாவில் மேல் சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக அகல் மையத்தின் இயக்குனர் இராயப்பன் சே.ச கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சகோதரி பெல்லா முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் சமூகம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் நாட்டுப்புற கலைகள் பலவற்றை நடித்தும் நடனமாடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியர்கள் ஜோசப் எரிக் டன்ஸ்டன் , லோச்சனா பிரியா மாணவர் ஒருங்கிணைப்பாளர்களாக ரூபஸ் அவந்திகா இலயோலா கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp