April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக உள்ளிட்ட மாற்று கட்சியினர்25க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகி விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்……….

விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பாமக உள்ளிட்ட மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா செஞ்சியில் நடைபெற்றது.

செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ஏற்பாட்டில் செஞ்சி கிழக்கு ஒன்றியபாமக முன்னாள் ஒன்றிய செயலாளர்பிரபு தலைமையில் ஒட்டம்பட்டு ,
திருவதிகுணம், சிட்டாம்பூண்டிஆகிய ஊராட்சி சேர்ந்தபாமக நிர்வாகிகள்கார்த்தி, வினோத்,தீனதயாளன்,தமிழ்,ஆனந்த்,பர்கத்,பிரகாஷ்,குமார்,முருகன்,சஞ்சய்.சங்கர்,ஜெயகுமார் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் 25க்கும் மேற்பட்டோர் அக் கட்சியிலிருந்து விலகிசெஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ முன்னிலையில்
திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்து நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைவரும் கடுமையாக உழைத்து கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்திடவேண்டும்என அவர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான்,பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,செஞ்சி நகர செயலாளர் கார்த்திக்,ஒன்றிய அவைத் தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை,செஞ்சி ஒன்றிய வரதகர் அணி அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தொண்டரணி பாஷா உள்ளிட்டோர் கலந்து.

Facebook
YouTube
Instagram
WhatsApp