April 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

செஞ்சியில் ஆற்காடு- விழுப்புரம் சாலையில் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்குவழிச்சாலையாக அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்…….

விழுப்புரம் மாவட்டம்நெடுஞ்சாலைத் துறை சார்பில்
ஆற்காடு விழுப்புரம் சாலையில் 79 / 140 முதல் 92/610 வரைகடின புருவத்துடன் கூடிய இருவழிச் சாலையில் இருந்து 85 கோடி ரூபாய்மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல், சிறுபாலங்கள் திரும்பக் கட்டுதல், மற்றும் மையத் தடுப்புச் சுவர், மழைநீர் வடிகால் அமைத்தல் பணிக்கு பூமி பூஜை விழா செஞ்சியை அடுத்த விநாயகபுரம் கூட்டு சாலையில் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரணி எம்.எஸ். தரணிவேந்தன், திருவண்ணாமலை அண்ணாதுரை,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனார்.

உதவி கோட்ட பொறியாளர் அக்பர் அலி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ, கலந்துகொண்டு 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலைஅமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கூறுகையில்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றஉங்களுடன் ஸ்டாலின் அரசு விழாவில்ஆற்காடு விழுப்புரம் சாலையை அகலப்படுத்திநான்கு வழிச்சாலையாக அமைக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து முதலமைச்சர் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைப்பதற்கு உத்தரவிட்டதையடுத்துஇப்பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நான்குவழிசாலை அமைக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும். பொதுப்பணி துறை அமைச்சருக்கும்விழுப்புரம் மாவட்டத்தின் சார்பாகவும்பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைதெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், கோட்ட பொறியாளர் உத்தண்டி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ் செல்வன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன்,மாவட்ட விவசாய அணி தலைவர் அஞ்சாஞ்சேரிகணேசன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன்,உதவி பொறியாளர்கள் பாலாஜி,விஷ்ணு பிரியா,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp