பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாகபச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, வேட்டி, சேலை,முழு கரும்புடன் ரூபாய் 3000 ரொக்கமாக வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.இந்தப் பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிவிவசாய கூட்டுறவு கடன்சங்கம் வளாகத்தில் உள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு துணை பதிவாளர் ஜீவிதா தலைமை தாங்கினார்.
செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
வங்கியின் உதவி செயலாளர்ராமு அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள்அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ கலந்து கொண்டு 643 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 ரொக்கத்துடன் கூடியபொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிசிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!